தமிழக பெண்களை கீழ்த்தரமாக விமர்சித்த அமைச்சரை இன்று வரை அடை காக்கும்- பினராய் அரசு!

தமிழக பெண்களை கீழ்த்தரமாக விமர்சித்த அமைச்சரை இன்று வரை அடை காக்கும்- பினராய் அரசு!

Share it if you like it

அண்மையில் கேரள முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வருக்கு பதில் அளிக்கும் வகையில் இவ்வாறு கூறியிருந்தார்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு, இடையேயான பரஸ்பர உறவானது கலாச்சாரம், சகோதரத்துவம், மற்றும் மொழி முதலியவற்றால், பின்னிப் பிணைந்தது ஆகும். இந்த ஆழமான பந்தத்தை, புரிந்து கொள்ள இயலாதவர்கள், தான் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம். என்று கூறியிருந்தார்.

கேரள முதல்வருக்கு சாமான்யன் எழுப்பிய கேள்விகள்?

  • கேரள மருத்துவ கழிவுகள், கோழியின் கழிவுகள், இவற்றை எல்லாம் உங்கள் மாநிலத்தில் வைத்து, அழிக்காமல் தமிழக பகுதியில், வந்து கொட்டி செல்ல தமிழகம் என்ன? குப்பை கூடையா சகோதரரே.
  • தமிழக சகோதர, சகோதரிகள், அக்கழிவுகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்  என்று உணரவில்லையா சகோதரரே. தமிழகத்தின் மண், நீர், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உணரவில்லையா சகோதரரே.
  • மூணாறு மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் பணிபுரிபவர்கள் 90% மேல் தமிழ் பெண்கள். சில கோரிக்கைகளை முன்வைத்து 2015 ஆம் ஆண்டு தமிழக பெண்கள் போராடிய பொழுது. மலையாள பத்திரிக்கைகள் தமிழ் தீவிரவாதி என்று போராடிய பெண்கள் மீது வன்மத்தை கக்கிய பொழுது உங்கள் மூளை எங்கு இருந்தது சகோதரரே.
  • அமைச்சர் எம்.எம் மணி தமிழக பெண்கள் மோசமானவர்கள், தேயிலை தோட்ட அதிகாரிகளுடன் தவறாக நடந்துகொள்பவர்கள் என்று தமிழக பெண்களை கீழ்த்தரமாக விமர்சித்த அயோக்கியன் எம்.எம் மணியை ஏன்? இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை சகோதரரே.
  • ஒட்டு மொத்த ஜயப்ப பக்தர்களின் மனம் புண்படும் படி நடந்துகொண்டது ஏன்? சகோதரரே.
  • பகலிலே பாவம் செய்த பாதிரியாருக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கிடைக்க ஏன்? தாமதம் செய்தீகள், யாரை பாதுகாக்க சகோதரரே.
  •  துளியும் கண்டனமோ, எதிர்ப்போ கூறாமல், பதுங்கி இருக்கும் நடிகர் கமலையும் மறக்க மாட்டோம். உங்களின் பிஸ்கோத் பாசத்தை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

 


Share it if you like it