தமிழக மீனவர்களின் வயிற்றில் அடித்த, கேரள கம்யூனிச அரசாங்கம்..!

தமிழக மீனவர்களின் வயிற்றில் அடித்த, கேரள கம்யூனிச அரசாங்கம்..!

Share it if you like it

தமிழக மீனவர்கள் சுமார் 11 முதல் 20 நாட்கள் வரை நடுக்கடலில் உயிரை பணயம் வைத்து தங்கியிருந்து மீன்களை பிடித்து அவற்றை உரிய அனுமதியுடன் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளவிற்கு அரசு அனுமதியுடன் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களை, கொரோனா பரவலை காரணம் காட்டி எவ்வித ஆய்வும் செய்யாமல். அவற்றை குழிதோண்டி புதைத்து வருகின்றனர் கேரள அரசு அதிகாரிகள். முன்னதாக தங்கள் மாநிலத்தில் அனுமதிப்பது போல் உள்ளே விட்டு பின்னர் அடாவடியாக மீன்களை பிடுங்கி புதைகின்றனர். மீன்களை திருப்பி அனுப்பினால் அவற்றை உள்ளூரில் விற்றாவது பிழைப்பு நடத்திக்கொள்வோம் என்று கண்ணீரோடு கூறுகின்றனர் தூத்துக்குடி மீனவர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வந்த கேரள லாரியை தமிழக அதிகாரிகள் திருப்பி அனுப்பியதற்கு, பழிவாங்கவே கேரள கம்யூனிச அரசு இவ்வாறு செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Share it if you like it