ஹிந்துக்களின் வீர கலை அடிமுறை !

ஹிந்துக்களின் வீர கலை அடிமுறை !

Share it if you like it

நம் முன்னோர்கள் வளர்த்த கலை ஒன்றை திரையின் வழியாக மீண்டும் நமக்கு நினைவுபடுத்தியிருக்கிறது சமீபத்தில் வெளியான பட்டாஸ் திரைப்படம். இப்படத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலையான அடிமுறை கலையை மையப்படுத்தி சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

அடிமுறை என்பது தமிழ்நாட்டு பாரம்பரிய தற்காப்புக்கலை-போர்க்கலை, விளையாட்டுகளில் ஒன்று. இக்கலையில் பண்டைய தமிழர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேய படையெடுப்புக்கு பின்னர் இக்கலை சிறிது சிறிதாக மறைந்தது. ஆனால், இன்னும் உயிருடன் தமிழர்கள் குருதியில் இக்கலை உள்ளது.

அடிமுறையில் ஒருவர் அடிபட்டால் அவரை இப்பொழுது உள்ள ஆங்கில மருத்துவ முறை மற்றும் இன்னபிற மருத்துவ முறையில் குணப்படுத்த முடியாது. ஏனென்றால் பூர்ண குணமாகும் வரை பாதிக்கப்பட்ட நபர் உறுப்புகள் வலுவிழந்து போகும். காலம் தாழ்த்தி சிகிச்சை அளிப்பது மரணத்திற்கு வழிவகுக்கும்.

அதை சரிசெய்ய அடிமுறை வைத்தியம் உதவுகிறது.அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய வேண்டும்… இதை முறையாக கற்றவர்கள் தான் செய்ய முடியும். இந்த கலையானது அனைத்து தற்காப்பு கலைகளின் தாயாக கருதப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கலையை மறந்துபோன நாம் இன்று இத்திரைப்படம் வாயிலாக நம் முன்னோர்களின் பெருமையை உணரும்படி உள்ளது.


Share it if you like it