Share it if you like it
- திமுகவின் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் அவர்கள் தலைமை செயலாளரை சந்தித்து (13-5-2020) மனுக்களை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்று கூறியுள்ளார். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களைதான் மூன்றாம்தர மக்கள்போல நடத்துவார்கள். மற்ற சாதிக்காரர்களை அப்படி நடத்தமாட்டார்கள் என்ற ஆதிக்க சாதி ஆவணப் பேச்சைத்தான் திரு. தயாநிதி மாறனின் இந்த பேச்சு காட்டுகிறது.
- நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா என்று கேட்பதன்மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் மதிக்கத்தக்கவர்கள் அல்ல என்று அவர் சொல்கிறார். இப்பேச்சு மற்ற சமூகங்களையும் இதுபோல் வருங்காலத்தில் பேச வழிவகைச் செய்யும். திரு.தயாநிதிமாறன் அவர்களின் சாதி ஆணவப் பேச்சு பட்டியல் சமூகத்தவனாகிய என்னையும், என் சமூக மக்களையும் பாதித்திருக்கிறது. ஆதலால், எல்லா மக்களும் சமம் என்று சட்டம் கூறுகிற வேளையில் பட்டியல் சமூக மக்களை கேவலப்படுத்தும் விதமாக பேசியிருக்கிற திரு.தயாநிதிமாறன் அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
- இவ்வாறு பாஜகவை சேர்ந்த எஸ்சி மாநில தலைவர் ம.வெங்கடேசன் அவர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
Share it if you like it