தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத காங்கிரசை தள்ளுபடி செய்து தள்ளிவைப்பது நலம் – பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி !

தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத காங்கிரசை தள்ளுபடி செய்து தள்ளிவைப்பது நலம் – பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி !

Share it if you like it

  • வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என்று பொய்யான கருத்துக்களை கூறி ராகுல்காந்தி தம்பட்டம் அடித்துள்ளார்.
  • இதற்கு விளக்கம் அளித்துள்ள பாஜகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர், வங்கி பயன்பாட்டு மொழியில் ‘write off’ என்றால் தள்ளுபடி என்று அர்த்தமல்ல. ‘தள்ளி வைப்பு’ என்று அர்த்தம். சொத்துக்கள் அதிகம் இருப்பதாக இருப்பு நிலை தெரிவிப்பதால், ஆவணப்படி பணம் இருந்தும் மக்களுக்கு மேலும் கடன் வழங்க முடியாத நிலையை உருவாக்குகிற காரணத்தினால் இருப்பு நிலையில் இருந்து அகற்றப்படுகின்றன. சட்டரீதியாக வாராக்கடன்களை வசூலிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடரப்படும். மேலும், தள்ளிவைப்பு நடவடிக்கையின் மூலம் கடனாளியின் கடன் அடைக்கப்பட்டுவிட்டதாக அர்த்தமாகாது. கடனாளிகளுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள் வேகமாக தொடரும். வசூலிக்கப்பட்டவுடன், அவை வங்கிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பு நிலையில் லாபமாக கருதப்படும்.
blank
நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ராகுல்காந்தியை கலாய்த்துள்ளனர்
  • தள்ளுபடிக்கும்’ ‘தள்ளிவைப்புக்கும்’ வித்தியாசம் தெரியாத காங்கிரஸ் மற்றும் இதர எதிர் கட்சிகளை மக்கள் தள்ளுபடி செய்து தள்ளிவைப்பது நலம் என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Share it if you like it