அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவை பற்றி தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்புவது, தீவிரவாதிகளை ஊடுறுவ செய்து அட்டூழியங்களை நிகழ்த்துவது, கொரோனா தொற்று நோயாளிகளை இந்தியாவிற்குள் அனுப்புவது என்று தொடர்ந்து வன்முறை போக்கையே கடைபிடித்து வருகிறது.
அண்மையில் இந்திய ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். உலகளவில் கோவிட் -19 எதிர்த்து போராடி வருகிறது இந்தியா. பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது பாகிஸ்தான் என்று குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார்.
இந்நிலையில் அகில இந்திய துணைத் தலைவர், பாஜக இளைஞர் பிரிவை சார்ந்த ஏ.பி. முருகானந்தம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பிரபல தீவிரவாதி தன்வீர் அஹமத் மாலிக் என்பவனை காஷ்மீர், தாத்னா கிராமத்தில் இன்று அதிகாலை நம்முடைய வீரர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பல்வேறு சதித்திட்டங்கள் வெளிவர உள்ளதாக தகவல். நம்முடைய ராணுவ வீரர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். ஜெய்ஹிந்த்!
பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பிரபல தீவிரவாதி தன்வீர் அஹமத் மாலிக் என்பவனை காஷ்மீர்,தாத்னா கிராமத்தில் இன்று அதிகாலை நம்முடைய வீரர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
பல்வேறு சதித்திட்டங்கள் வெளிவர உள்ளதாக தகவல்.
நம்முடைய ராணுவ வீரர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
ஜெய்ஹிந்த் ! 🇮🇳 pic.twitter.com/BZ7ZJMCHup— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) May 5, 2020