திபெத் புத்த மதத்தை சீன அரசு அடக்குவது ஒரு வகையான இனப்படுகொலை!

திபெத் புத்த மதத்தை சீன அரசு அடக்குவது ஒரு வகையான இனப்படுகொலை!

Share it if you like it

கிறிஸ்தவர்கள், முஸ்லீம், மற்றும் இன்னும் பிற மத வழிபாட்டு முறைகளில் கடுமையான கட்டுபாடுகளை விதித்து சீனா தொடர்ந்து மக்களைகொடுமைப்படுத்தி வருகிறது. குரான், பைபிள், ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள், மசூதிகள், சர்ச், போன்றவற்றை தொடர்ந்து இடிப்பது என பல்வேறு செயல்களை செய்து வருகிறது சீன கம்யூனிஸ்ட் அரசு.

இந்நிலையில் திபெத்திய புத்தமார்களுக்கு மத சுதந்திரத்தையும் அவர்களின் அடுத்த மத குருவாக ஒரு வாரிசை தேர்ந்தெடுக்கும் உரிமையையும் சீனா வழங்க வேண்டும். திபெத்திய புத்த மதத்தை சீன அரசு அடக்குவது ஒரு வகையான கலாச்சார இனப்படுகொலை. மேலும் 1995 ஆம் ஆண்டு திபெத்திய சிறுவன் 6 (வயது) கெதுன் சோக்கி நைமா 11 வது பஞ்சன் லாமாவாக அங்கீகரிக்கப்பட்டார்.

இது தலாய் லாமாவுக்குப் பிறகு திபெத்திய புத்த மதத்தின் இரண்டாவது மிக உயர்ந்த ஆன்மீக அதிகாரமாகும். அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு நைமா காணாமல் போயிருந்தது திபெத் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்தே அக்குழந்தையை சீன அதிகாரிகள் சிறை பிடித்து இருப்பது உலக நாடுகளுக்கு தெரிய வந்தது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான தூதர் சாம் பிரவுன் பேக் அண்மையில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளும் பொழுது பஞ்சன் லாமாவை உடனே விடுவிக்க வேண்டும் என சீன அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாள் சீன கம்யூனிஸ்ட் அரசின் கோர முகத்தை வெளி உலகிற்கு காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it