திமுக என் பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை – கெத்து காட்டிய வி.பி.துரைசாமி !

திமுக என் பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை – கெத்து காட்டிய வி.பி.துரைசாமி !

Share it if you like it

  • தேசிய SC, ST ஆணையத்தின் துணை தலைவராக இருந்த பாஜகவை சேர்ந்த எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அவரை தி.மு.க. துணை பொதுச் செயலாளர், வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வு ஸ்டாலினுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதனால், பா.ஜ.வில், துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது. நேற்று ஊடகம் ஒன்றுக்கு , துரைசாமி அளித்த பேட்டியில், ‘ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுகிறார்’ என்ற கருத்தை தெரிவித்தார்.
  • இதையடுத்து, துரைசாமியிடம் இருந்த, துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டது. அவர் வகித்த பதவியை, அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கி, கட்சியின் தலைவர் ஸ்டாலின், அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, வி.பி.துரைசாமி கூறுகையில், ”பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும். தி.மு.க.வில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர்,” என்றார். இந்நிலையில், இன்று (மே 22) தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் இல.கணேசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

Share it if you like it