பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு பிச்சை போட்டதே திமுக தான் என்று அண்மையில் ஆர்.எஸ். பாரதி இழிவுப்படுத்தி பேசிய காணொலி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு தமிழக மக்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பினை காட்டினர். அவர் மீது தேசிய பட்டியல் சமூக ஆணையத்திடம் பாஜக மூத்த தலைவர்கள் சிலர் பாரதிக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஆறுமணிக்கு ஆர்.எஸ். பாரதியை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். சிறிது நேரத்திற்குள்ளாகவே அவர் ஜாமீன் பெற்று வீடு திரும்பியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் உள்பட தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதற்கு நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மும்பை சிவப்பு விளக்கு காரர்கள் என்று கண்ணியமற்ற சொற்களால் ஊடகத்தினரை ஆர்.எஸ் பாரதி கழுவி ஊற்றிய போது கண் சிவக்காதவர்கள் இன்று கைதுக்காக ஏகத்துக்கும் பொங்குவதை பார்க்கும் போது இவர்களது சொரனை கெட்ட தனத்தை நினைத்து சோகப்படத்தான் முடிகிறது.
ஆண்டான் அடிமை காலத்தில் பயன்படுத்தப்பட்டு வழக்கிழந்து போன சமூக நீதிக்கு எதிரான வார்த்தைகளை பேசிவிட்டு ஜாமீனுக்கும் முன்ஜாமீனுக்கும் அலைகிற தி.மு.க-வை இனி திராவிட முன்ஜாமீன் கழகம் என்றே அழைக்கலாமோ.. என்று கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை சிவப்பு விளக்கு காரர்கள் என்று கண்ணியமற்ற சொற்களால் ஊடகத்தினரை #RSBharathi கழுவி ஊற்றிய போது கண் சிவக்காதவர்கள் இன்று கைதுக்காக ஏகத்துக்கும் பொங்குவதை பார்க்கும் போது இவர்களது சொரனை கெட்ட தனத்தை நினைத்து சோகப்படத்தான் முடிகிறது.#ஆர்எஸ்_பாரதியும்_கோரஸ்_பாவிகளும்
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) May 23, 2020