திருநீர்மலையில் சட்டவிரோதமாக 30 ஆண்டுகள் செயல்பட்டு வந்த தேவாலயம் இடிப்பு!

திருநீர்மலையில் சட்டவிரோதமாக 30 ஆண்டுகள் செயல்பட்டு வந்த தேவாலயம் இடிப்பு!

Share it if you like it

சென்னை குரோம்பேட்டை அடுத்த திருநீர்மலை துர்கா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை ஒட்டி பச்சை மலை உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சுவிசேஷ திருச்சபை அரசு நிலத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்தது. இதனை எதிர்த்து 2010 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள சில சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவையும் மீறி திருச்சபை தொடர்ந்து இயங்கி வந்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த வண்ணம் இருந்தது. மலையில் இருந்து தேவாலயத்தை அப்புறப்படுத்துமாறு பல்லாவரம் தாசில்தார் ராஜேந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து மலைக்கு செல்லும் படிகளை தகர்த்தும்  எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it