தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல். தாங்கள் நடத்தும் பள்ளிகளுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும். என்கின்ற குறுகிய நோக்கமே அரசியல்வாதிகள் மற்றும் திரை பிரபலங்கள் புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.
பிரபல பெண் அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் தனது முகநூல் பக்கத்தில் தனது கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல துறைகளின் ஆகப்பெரும் ”பணக்கார” பிரபலங்கள் ‘ஒவ்வொருவரும்’ தங்களுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகள் எல்லாம் …
”தமிழகத்தில் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் ?”
”வேறுமாநிலத்தில் எனில்…அங்குள்ள எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் ?”
”வெளிநாடுகளில் படிக்கிறார்கள் எனில்.. ஏன் வெளிநாடுகளில் படிக்கிறார்கள் ?”
போன்றவற்றை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்துவிட்டு …அதன்பிறகு எதிர்ப்பு தெரிவிப்பதே சரியானது .
ஏழைக்கு ஒரு வகை கல்வி, மத்திய வகுப்புக்கு ஒரு வகை கல்வி , பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி, மகா பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி …என்று வகை பிரித்து இங்கு கல்வி விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது…என்பது தான் …
யாராலும் மறுக்க இயலாத இங்குள்ள கள எதார்த்தம்.