தில்லி கலவரத்தின்போது ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டதற்காக ஏசியாநெட் (Asianet) தொலைக்காட்சிக்கு 48 மணி நேர தடை

தில்லி கலவரத்தின்போது ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டதற்காக ஏசியாநெட் (Asianet) தொலைக்காட்சிக்கு 48 மணி நேர தடை

Share it if you like it

அசம்பாவிதங்கள் குறிப்பாக கலவரங்கள் நடைபெறும் போது மக்களை குழப்பும் வகையிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரிமாறும் சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையிலும் சில ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

செய்திகளை வெளியிடும் போது தவறான தகவல்களை வெளியிடக்கூடாது மேலும் சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவிக்க கூடாது, தேசத்தின் இறையாண்மைக்கு பங்கம் சேர்க்கும் வண்ணம் கருத்துக்களை பகிர்ந்து இருக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் சில தினங்களுக்கு முன் தில்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை ஏசியாநெட் (Asianet) நிறுவனம் வெளியிட்டது. அதன் நிருபர்கள் ஊடக தர்மத்தை மதிக்காமல் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் இரு தரப்புக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கட்டுக்கதைகளை உரைத்தனர்.

பொதுமக்கள் தரப்பிலிருந்து பல புகார்கள் எழுந்தன, தகவல் தொடர்பு அமைச்சகம் ஏசியாநெட் தொலைக்காட்சிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ஏசியாநெட் நிறுவனம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.  இதையடுத்து ஏசியாநெட் தொலைக்காட்சிக்கு இன்று மாலை ஏழு முப்பது ( 7:30pm ) மணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஏழு முப்பது மணி (7:30pm) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மீறி Media One தொலைக்காட்சிக்கும் 48 மணி நேர தடை விதிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it