திவாலானது உலகின் பழமையான நிறுவனம்

திவாலானது உலகின் பழமையான நிறுவனம்

Share it if you like it

178 ஆண்டுகள் பழமையான பிரிட்டனின் தாமஸ் குக் என்ற சுற்றுலா நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமஸ் குக் என்ற சுற்றலா நிறுவனம் 1841 ஆம் ஆண்டு தாமஸ் குக் என்பவரால் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 

இந்நிறுவனத்திற்கு 25 கோடி டாலர் கடன் உள்ளது. இதனை அடைக்க நிறுவனம் சார்பில் முதலீடுகளை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் தற்போது நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் 21 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it