கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு தொடர்பு உள்ளது என்கின்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஜஏ) தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர துவங்கியுள்ளன.
கடத்தல் தங்கங்கள் நகை வியாபாரிகளுக்காக அல்ல, தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதற்காக அவை கடத்த பயன்படுத்தப்பட்டது என்று (என்ஜஏ) அதிர்ச்சிகரமான செய்தியினை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
தங்கமான முதல்வர் பினராயிடம் இருந்து அனைவரும் பாடம் கற்று கொண்டு ஆட்சி நடத்த வேண்டும் என்று தமிழக தோழர்கள் இந்தியாவிற்கே வகுப்பு எடுப்பார்கள். ஆனால் இன்று வரை இதற்கு பதில் அளிக்காமல் பெட்டி பாம்பாக அடங்கி கிடப்பது தமிழக மக்களிடையே கடும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.