தேசிய சிறுமான்மையினர் ஆணையத் தலைவர் CAA குறித்து கருத்து

தேசிய சிறுமான்மையினர் ஆணையத் தலைவர் CAA குறித்து கருத்து

Share it if you like it

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் செய்யது ஹாசன் ரிஸ்வி இந்த சட்டதிருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, “குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அதனால் அதை எதிர்த்து நாம் போராட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும், நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான நிலை ஏற்பட்டால் தேசிய சிறுபான்மை ஆணையம் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளும். போராட்டம் நடத்துபவர்களை காவல்துறையினர் அமைதியான முறையில் கையாள வேண்டும்” என்று அவர் கூறினார்.


Share it if you like it