தேர்வை ரத்து செய்தால்..! தேர்தலையும் ரத்து செய்யலாமே..? பொங்கிய பொதுமக்கள்!

தேர்வை ரத்து செய்தால்..! தேர்தலையும் ரத்து செய்யலாமே..? பொங்கிய பொதுமக்கள்!

Share it if you like it

மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள். என்று அறிவிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை முன் வைத்துள்ளார். அதே போன்று வைகோ தமிழக அரசிடம் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலினும் வலியுறுத்தியுள்ள நிலையில். அண்மையில் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கே. என். நேரு அடுத்த முறை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பிட் அடிக்க ஊக்கப்படுத்துவோம் என்று கூறியிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

தேர்வுகளை ரத்த செய்ய சொல்லும் இவர்கள். அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையும், கொரோனாவை காரணம் காட்டி மீண்டும் எடப்பாடியே முதல்வராக தொடர வேண்டும் என்று கூறினால் ஏற்றுகொள்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி?

இது துளியும் மாணவர்களின் நலன் பற்றி கருத்தில் கொள்ளாத அர்த்தமற்ற கோரிக்கை என்று பல்வேறு தரப்பு மக்களும் தங்களின் கடும் எதிர்ப்பினை கூறியுள்ளனர். கஷ்டப்பட்டு நன்கு படித்த மாணவனின் மனநிலை கடுமையாக பாதிக்கப்படும் என்பதுடன். எதிர்காலத்தில் பணிக்கு செல்லவிருக்கும் அம்மாணவனுக்கு பல்வேறு சங்கடங்களை இது வழங்கும் என்பது திண்ணம்.

நன்கு படிக்கும் மாணவர்களின் தன்னம்பிக்கையை இது குலைத்து விடும். அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் தங்களின் சுயநலத்திற்காக மாணவர்களை தூண்டி விட இது வாய்ப்பாக அமையும். கல்லூரிகள், பள்ளிகள், நடத்தும் கட்சிகள் தங்கள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகம் வசூலிப்பதை குறைக்க முன்வருவார்களா என்று நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it