நாங்கள் நோய்க்கு பயப்படவில்லை, நோயாளிகளின் தாக்குதலுக்கு தான் பயப்படுகிறோம் – குடியுரிமை மருத்துவர்கள் சங்கம்  !

நாங்கள் நோய்க்கு பயப்படவில்லை, நோயாளிகளின் தாக்குதலுக்கு தான் பயப்படுகிறோம் – குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் !

Share it if you like it

  • அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் குடியுரிமை மருத்துவர்கள் சங்கத்தினர் (ஆர்.டி.ஏ) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதுடன், சுகாதார வல்லுநர்கள் மற்றும் கிளினிக்குகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடைசெய்யும் முன்மொழியப்பட்ட சட்டத்தை அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
  • மேலும் கடிதத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உள்துறை அமைச்சகம் வழங்கிய ஆலோசனை இருந்தபோதிலும், அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
  • ஏப்ரல் 15 ம் தேதி மொராதாபாத் சம்பவம் உட்பட, நாட்டில் கொரோனா வைரஸ் அதனுடைய கோர தாண்டவத்தின் மத்தியில், குறைந்தது ஏழு வன்முறை சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, இதில் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
  • லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் ஏப்ரல் 14 ஆம் தேதி ஒரு பெண் மருத்துவர் கொரோனா நோயாளியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையும் ஆர்.டி.ஏ குறிப்பிட்டுள்ளது.
  • சுகாதார வல்லுநர்கள் தொற்றுநோய்க்கு பயப்படவில்லை, ஆனால் சிகிச்சை பெறும் சமூகத்தினரால் தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகத்துக்கு தான் பெரிதும் பயப்படுகிறோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இது ஒரு எதிர்பாராத ‘தொழில் அபாயமாக’ மாறியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நோய்கள் மற்றும் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு எங்கள் சொந்த பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம். ஆனால் அதற்கு ஈடாக நாங்கள் பெறுவது நோயாளிகளின் உறவினர்களிடமிருந்து வன்முறைதான்” என்று ஆர்.டி.ஏ. குறிப்பிடப்பட்டுள்ளது.
  • எனவே சுகாதார அமைச்சினால் முன்மொழியப்பட்ட ‘சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்) மசோதாவை செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.”இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Share it if you like it