மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு கேட்டு வருகிறது. எனினும் பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்நிலையில் துருக்கி அதிபர் ரிசப் தயீப் எர்டோகன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அங்கு வசிக்கும் மக்களுக்கு இந்தியா சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவிகாரத்தில் பாகிஸ்தானுக்கு துருக்கி அரசு என்றும் ஆதரவாக இருக்கும் என்றார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் ஜம்மு காஷ்மீரை குறிப்பிட்டு துருக்கி அதிபர் வெளியிட்ட அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக ஜம்மு – காஷ்மீர் விளங்குகிறது. மேலும் இந்தியாவின் உள் விவிகாரத்தில் துருக்கி அரசு தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மலேசிய அரசு அறிக்கை வெளியிட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.