இந்திய மக்களால் அவ்வளவு எளிதில், யாரும் மறந்து விட முடியாத பெயருக்கு சொந்தக்காரர் டாக்டர் அம்பேத்கர். இந்திய மக்களின் நன்மைக்காக தன்னையே நெய்யாக உருக்கி, அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய, தலைச் சிறந்த இந்திய தலைவர்களில் இவரும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இந்திய விடுதலைக்குப் பின் நாட்டின், முதன் சட்ட அமைச்சராக திகழ்ந்தவர்., என்பதோடு மட்டுமில்லாது, உயர் கல்வி பெறுவதற்காக, அயல்நாடு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கும் உரியவர். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கே, பெருமை சேர்த்த ’விருது’ இவர் என பலரும், அன்புடன் அழைத்து வரும் நிலையில், அம்பேத்கர் லண்டனில் வசித்த வீட்டை, நீண்ட சட்ட போராட்டம் நடத்தி அம்பேத்கரின் வீட்டை மோடி தலைமையிலான அரசு மீட்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
பிரபல எழுத்தாளர் மா.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் இன்று பிரதமராக இருக்கிறேன் என்றால் அது பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தினால்தான் – நரேந்திர மோடி அவர்கள்
பிற்படுத்ப்பட்ட சாதியை சார்ந்த மோடி பிரதமர் ஆனதற்கு காரணமே ஈவெ ராமசாமிதான் – சுப.வீ.#திருட்டு_திராவிடம்
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) July 28, 2020