நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் – முஸ்லீம் அமைப்பு

நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் – முஸ்லீம் அமைப்பு

Share it if you like it

முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா இ ஹிந்த்தின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கு, வெறும் நிலப்பிரச்சினை வழக்கு மட்டும் அல்ல. சட்டத்தின் மாட்சிமையை பரிசோதிக்கும் வழக்கு. இந்த வழக்கில், மத நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல், உண்மைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்று நீதியை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிறான். சுப்ரீம் கோர்ட்டும், இது நிலப்பிரச்சினை வழக்கு மட்டுமே என்று கூறியுள்ளது.

எந்த கோவிலையோ, எந்த வழிபாட்டு தலத்தையோ இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்படவில்லை என்று நிரூபிக்கும் நோக்கோடுதான், சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் தரப்பு வாதிட்டது. எனவே, ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு அமைவதையே எல்லோரும் விரும்புகிறோம். இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று ஏற்கனவே கூறி இருக்கிறோம். அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். அதுபோல், முஸ்லிம்களும், சக குடிமக்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

தீர்ப்பு எப்படி இருந்தாலும், அமைதியை கடைப்பிடிக்குமாறு அனைத்து குடிமக்களையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Share it if you like it