பல்லாயிரம் கோடியை நீரவ் மோடிக்கு, முந்திய காங்கிரஸ் அரசு கடனாக வழங்கியது. வங்கியில் வாங்கிய கடனை முறையாக கட்ட முடியாத காரணத்தால் நீரவ் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்திய தன் விளைவாக தற்பொழுது நீரவ் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி காட்சி மூலமாக காங்கிரஸ் கட்சியை பார்த்து இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
நீரவ் மோடி வழக்கில் ஆஜரான முன்னாள் நீதிபதி அபய் திப்சே, ராகுல் காந்தி மற்றும் அசோக் கெஹ்லோட் முன்னிலையில் ஓய்வு பெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். நீரவ் மோடியை காங்கிரஸ் ஏன்? பாதுகாக்க முயற்சிக்கிறது? இது முற்றிலும் இழிவானது. இதில் காங்கிரஸ் வெற்றிபெற விடமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
Why is Congress trying to defend Nirav Modi? This is totally deplorable. We will not let Congress succeed in this.
कांग्रेस नीरव मोदी को क्यों बचाना चाहती है? हम कांग्रेस के इस प्रयास की भर्त्सना करते हैं और देश को विश्वास दिलाते हैं कि इसमें कांग्रेस को सफल नहीं होने देंगे। pic.twitter.com/54EKC5AQaz— Ravi Shankar Prasad (@rsprasad) May 14, 2020