நீரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு

நீரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவிப்பு

Share it if you like it

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட நீரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக, மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. குஜராத்தை சார்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,750 கோடி ரூபாயை கடனாக பெற்றுக்கொண்டு இந்தியாவை விட்டு சட்டவிரோதமாக வெளியேறி  இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார்.  இதனால் மத்திய அரசு அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கைது ஆணையை பிறப்பித்தது.  இந்நிலையில் அவரை பொருளாதார குற்றவாளியாக, மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதன் மூலம் நீரவ் மோடி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   


Share it if you like it