கொரோனா வைரஸ் கிருமி சீனாவில் பிறந்து இன்று உலக நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொடுமைப்படுத்தி வருகிறது. இதுவரை இக்கொடிய வைரஸ் 20,000 க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்களை சக்கையாக பிழிந்துள்ளது.
117-க்கும் மேற்பட்ட நாடுகளில், ஒரு லட்சத்தையும் கடந்து, பலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மனிதர்களிடம் இருந்து இந்நோய், தொற்று பரவாது என்ற சீனாவின், உறுதிமொழியை நம்பி, இன்று உலக சுகாதார நிறுவனமே, தலை கவிழ்ந்து உலக மக்ககளுக்காக, இன்று கண் கலங்கி நிற்கும் அவலநிலையை நிலவுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையை நம்பிய பல நாடுகள், இன்று தங்களின் கடுமையான எதிர்ப்பினை (WHO) தெரிவித்து உள்ளது. ஸ்பெயின், இத்தாலி, ஈரான், ஆகிய நாடுகளில், கொரோனாவில் உயிர் இழந்துள்ள, மக்களின் விவரங்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
சீனாவில் எவ்வளவு நபர்கள் இறந்துள்ளனர். என்பதை அந்நாடு இதுவரை அதிகாரபூர்வமாக, தெரிவிக்கவில்லை என்பதோடு உண்மையை, அப்பட்டமாக மறைத்துள்ளது. கடந்த ஐனவரி மற்றும் பிப்ரவரி, ஆகிய இரண்டு மாதங்களில் 2 கோடிய 10 லட்சம், கைபேசி எண்கள் தொடர்பில், இல்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் முன்னணி தொலைபேசி நிறுவனமான, சீனா மொபைல் லிமிடெட் 80 லட்சம் வாடிக்கையாளர்களை, இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலையும். சீனா யுனிகாம் ஹாங்காங் லிமிடெட், நிறுவனம் தங்களின் 78 லட்சம், வாடிக்கையாளர்களின் நிலை என்ன ஆனது, என்று தெரியவில்லை என தங்களின் கவலையை தெரிவித்துள்ளது.
அதேபோன்று மற்றொறோ நிறுவனமான, சீனா டெலிகாம் கார்பரேசன் நிறுவனம். தங்களின் 56 லட்சம் வாடிக்கையாளர்கள், மாயமாகி விட்டதாக கூறியுள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் எல்லாம், ஒன்று இறந்திருக்க வேண்டும், அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும். கொரோனா அதிகமாக பரவிய, நாடுகளிலே இவ்வளவு உயிர் இழப்பு என்றால், கொரோனா பிறந்த நாட்டில், எவ்வளவு உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கும், என்று பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க சீனாவை பார், அந்த நாட்டை பின்பற்றும், மற்ற நாடுகளையும் பார், கேரள அரசின் சாதனைகளை பார், என்று கம்பு சுத்தும் ஜாம்பவான்களிடம், இதற்கு அவர்களிடம் பதில் இல்லை, என்று நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.