நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 40 % உயர்வு..! தன்னம்பிக்கையோடு முன்னேறும் இந்தியா!

நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 40 % உயர்வு..! தன்னம்பிக்கையோடு முன்னேறும் இந்தியா!

Share it if you like it

கொரோனா தொற்றை, ஒழிக்க விதி விட்ட வழி, என்று வல்லரசு நாடுகள் கதறி கொண்டு இருக்கிறது. கொரோனாவின் கோர முகத்தை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மத்திய, மாநில அரசுகளின், வழிகாட்டுதல் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கொரோனாவினால் உயிர் இழந்தவர்களின் இறப்பு விகிதம் 3.2 சதவீதமாக கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உலகிலேயே ஒரே நாடாக இந்தியா உள்ளது என்று அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.பி. முருகானந்தம் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு ஆரம்ப நிலையில், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7.1 % இருந்தது. இப்பொழுது 40 % உயர்ந்துள்ளது. உலகமே கொரோனாவால் துவண்டு இருக்கின்ற நிலையில், இந்தியா நம்பிக்கையோடு நகர்கிறது. பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் நல்ல பலன் கிடைத்திருக்கிறது.


Share it if you like it