நோய்  நீக்கும் கற்கடேஸ்வரர் ஆலயம்..!

நோய் நீக்கும் கற்கடேஸ்வரர் ஆலயம்..!

Share it if you like it

தொன்மையும் , மேன்மையும் பொருந்திய அற்புத தலமான கற்கடேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் இருந்து திருவிசை நல்லூர் சென்று அங்கிருந்து 2 கல் தொலைவில் இவ்வாலயத்தை நாம் சென்று தரிசிக்கலாம்.

தல சிறப்பு.
ஓர் சிறிய உயிரினத்திற்கு அபய கரம் நீட்டிய தலமாகவும், சுயம்புலிங்கமாக தோன்றி எந்நாட்டவர்க்கும் இறைவனாக காட்சியளிக்கிறார் நம்

ஸ்தல வரலாறு.
கால ஓட்டத்தில் பெரிதும் அறியப்படாமல் இருந்த இவ்வாலயம் இன்று இதன் மகத்துவம் அறிந்த எண்ணற்ற மக்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்யும் கீர்த்தி பெற்ற தலமாக திகழ்கின்றது என்று கூறினால் அது மிகையன்று.
ஓர் சமயம் கந்தர்வன் ஒருவன் துர்வாச முனிவரின் தோற்றத்தை கண்டும், அவரின் பூஜை முறைகளை கண்டு எள்ளி நகைத்தான். அவ்முனிவரோ அவனின் செயல்களை புறம் தள்ளிவிட்டு தம் பணியில் கவனத்தை முழுமையாக செலுத்தினார். ஆனால் அவனோ தொடர்ந்து கேலி செய்ததோடு மட்மில்லாமல் நண்டு போல் ஊர்ந்தும் செய்கைக்காட்டியும் தொடர்ந்து பூஜைக்கு இடையூறு ஏற்படுத்தினான். இதனால் பொறுமையிழந்த முனிவரோ கடும் சினம் கொண்டு இன்று முதல் ’நீ’நண்டாக போவாய் என்று சாபம் அளித்துவிட்டார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத அவனோ அவரின் காலில் வீழ்ந்து தங்கள் மகத்துவம் அறியாத இப்பாலகனை மன்னியுங்கள் என்று மன்றாடினான். அவன் மீது இரக்கம் கொண்டு சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் இந்த பாவ குழியில் இருந்து மீண்டு வரலாம் என்று அருள் புரிந்தார். சாபம் பெற்ற அவனோ இவ்விடம் வந்து அருகில் உள்ள தாமரை குளத்தில் மலர்களை பறித்து வந்து சாபம் நீங்க பூஜைகள் செய்து வந்தான். அதற்கு முன்பில் இருந்தே சிவலிங்கத்திற்கு அன்றாடம் 1008 தாமரை மலர்களால் நித்தம் பூஜைகள் செய்து வந்தான் இந்திரன். எதிரிகளை வீழ்த்தவும் பல வரங்களை ஈசனிடம் பெறவும் தன் குருவின் ஆலோசனைப்படி சிறப்பாக பூஜைகள் செய்து வந்தான். ஓர் நாள் அவனுக்கு பூஜைக்குரிய மலர்களில் அன்றாடம் ஓர் மலர் குறைவது கண்டு கடும் சினம்கொண்டான். யார் இந்த அக்கிரமத்தை செய்வது என்று ஆராய தொடங்கினான். ஓர் தினம் நடுநிசியில் நண்டு ஒன்று மலரை பறித்துக்கொண்டு மெல்ல நகர்ந்து சிவலிங்கத்தின் மீது ஏறி தாமைரையை சாற்றியதை. என் பூஜைக்கு இடையூறு ஏற்படுத்தியது இந்த அற்ப நண்டா என்று தன் வாள் கொண்டு வீசினான். கந்தர்வனை காக்கும் பொருட்டு ஈசன் லிங்கத்தில் ஓர் துளையை ஏற்படுத்தினார். அதற்குள் புகுந்து சாபவிமோசனம் அடைந்தது நண்டு. வீசிய வாள் லிங்கத்தின் மீதுப்பட்டு கடும் வெட்டு காயத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்திரன் மிகுந்த வருத்தப்பட்டான். அப்பொழுது ஓர் அசரீரி கேட்டது ‘ஆணவத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது பணிவு குணமே நன்மை தரும்’ என்று அறிவுறுத்தியது அந்த தெய்வ ஓலி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 42 தலமாகும்! திருஞானசம்பந்தர் இத்தலத்தை பிணி நீக்கும் சிவா என்று பாடியுள்ளார்.

“மருந்து வேண்டில் இவை மந்திரங்கள்,
இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்,
இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே
(சம்பந்தர்)

ஆலய அதிசயம்

  • எங்கும் காண கிடைக்காத வகையில் இரண்டு அம்பிகை உள்ள தலம்
  • சிவலிங்கத்தில் வெட்டு காயமும் நண்டிற்காக ஈசன் ஏற்படுத்திய துளையையும் இன்றும் நாம் காணலாம்!
  • இது நோய்த் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து தரப்படும் எண்ணெய் அனைத்து நோய்களுக்கும் நிவாரணமாக திகழ்கிறது!
  • தன்வந்திரி முனிவர் தவம் செய்த இடம்!
  • சிறியா நங்கை, பெரியா நங்கை என்ற மருத்துவ மூலிகைகள் தல விருட்ஷமாக இன்றும் நாம் காணலாம் என்பது சிறந்த உதாரணம்!
  • காறாம் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்யும் பொழுது லிங்கத்திருமேனியின் பிளவில் இருந்து பொன் நிற நண்டு வந்து காட்சி அளிக்கும் என்று வசிஷ்டமகாத்மியம் நூலில் கூறப்பட்டுள்ளது!
  • 6.2.2003 ஆண்டு கும்பாபிஷேக முதல் நாள் யாக பூசையின் பொழுது யாககுண்டத்தை நண்டு வலம் வந்த அதிசயம் நடந்தை அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்!

    மூலவர்-கற்கடேஸ்வரர்
    தாயார்-அபூர்வநாயகி, அருமருந்து நாயகி
    ஊர்-திருந்துதேவன்குடி
    மாவட்டம்-தஞ்சாவூர்
    தீர்த்தம்-காவேரி

    –கதிர் கலியமூர்த்தி

Share it if you like it