Share it if you like it
- நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “காப்பான்” திரைப்படத்தில், வில்லன் தரப்பில், வெட்டுக்கிளிகளை ஏவி, வேளாண் சாகுபடியை நாசமாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெறும்….
- அந்த காட்சிகளை, அண்மை நாட்களாக, வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் செய்திகள் நிஜமாக்கி வருகின்றன.
- கடந்த மாதம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் முகாமிட்டு, விவசாயிகளை படாதபாடு படுத்தின. தற்போது, பாகிஸ்தானைத் தொடர்ந்து, கிழக்கு ஆப்பிரிக்காவிலும், பல லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர். வெட்டுக்கிளிகள், தமது உடல் எடைக்கு நிகராக, உணவை இரையாக்குவதால், விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
- ஒருமுறை வெட்டுக்கிளிகள் படையெடுத்தால், சுமார் 2 லட்சம் டன் உணவு பொருள் உற்பத்தி பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தற்போதைய இளவேனிற்காலம், வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கத்திற்கு உகந்த பருவம் என்பதால், அவற்றை உலக நாடுகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தும், பன்னாட்டு சுற்றுசூழல் வல்லுநர்கள், இல்லையேல், அவை, 500 மடங்கு அளவிற்கு பெருகிவிடக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.
Share it if you like it