பப்பாளி பழத்திற்கு கொரோனா தவறான முடிவை காட்டிய சீன மருத்துவ உபகரணம் – தான்சானியா அதிபர் கண்டனம்!

பப்பாளி பழத்திற்கு கொரோனா தவறான முடிவை காட்டிய சீன மருத்துவ உபகரணம் – தான்சானியா அதிபர் கண்டனம்!

Share it if you like it

கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்தி விட்டோம் எங்களிடம் கொரோனா வைரஸை கண்டறிவதற்கான அதிநவீன மருத்துவ கருவிகள் உள்ளது என்று சீனா  கூறியது. இதனை நம்பி பல நாடுகள், வரிசையில் சென்று போட்டி போட்டு, கொண்டு சீனாவிடம்  இருந்து மருத்துவ, உபகரணங்களை ஆர்டர் செய்து, வாங்கியுள்ளனர்.

சீன கருவிகள் 30 சதவீத அளவிற்கே முடிவை தந்தன. ஆனால் 80 சதவீதம் வரை துல்லிய முடிவுகள் கிடைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த முடியும். எனவே இந்த மருத்துவ  கருவிகள் அனைத்துமே தரமற்றவை என இறக்குமதி செய்த ஐரோப்பிய நாடுகள் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தது.

இந்நிலையில் தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி சீன மருத்து உபகரணங்கள் உண்மையா அல்லது போலியா என்பதனை அறிய ஆட்டின் ரத்ததிற்கு ஒரு பெயரும் பப்பாளி பழத்திற்கு (‘எலிசபெத் அனே’) என்று பெயரிட்டு அந்த இரண்டு மாதிரிகளையும், அந்நாட்டின் தேசிய மருத்துவ ஆய்வகத்திற்கு, அனுப்பி வைக்குமாறு ரகசிய உத்தரவு ஒன்றினை தனது அதிகாரிகளுக்கு கூறியிருந்தார் அதிபர்.

முடிவில்  பப்பாளி பழத்திற்கு கொரோனா  உள்ளது என்றும் ஆட்டிற்கு கொரோனா இல்லை என்றும் முடிவுகள் கூறியது. மே 3 அன்று, தான்சானியாவின் அதிபர் ஜான் மகுஃபுலி, இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் சோதனை கருவிகள் தவறானவை மற்றும் நம்பமுடியாதவை என்று  தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/sab43386280/status/1258919394421456897


Share it if you like it