பயங்கரவாதிகளுக்கு தூக்கு – உ.பி நீதிமன்றம் அதிரடி

பயங்கரவாதிகளுக்கு தூக்கு – உ.பி நீதிமன்றம் அதிரடி

Share it if you like it

கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த இம்ரான் ஷாசத், முகம்மது பாரூக், பீகாரை சேர்ந்த சபாவுதீன், ராம்பூரை சேர்ந்த முகம்மது ஷெரீப், மொரதாபாத்தை சேர்ந்த ஜாங் பகதூர், மும்பையை சேர்ந்த பகிம் அன்சாரி ஆகிய 6 பேர் கைது செய்யப் பட்டனர். இந்த வழக்கு விசாரணை ராம்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. 6 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி உறுதி செய்தார்.
இதனையடுத்து 4 பேருக்கு தூக்கு தண்டனையும் ஜாங் பகதூருக்கு ஆயுள் தண்டனையும், பகிம் அன்சாரிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it