பறிபோகும் கோவில் சொத்து…!!!  கோவில் நில ஆக்கிரமிப்பு…!!!

பறிபோகும் கோவில் சொத்து…!!! கோவில் நில ஆக்கிரமிப்பு…!!!

Share it if you like it

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பது நம் ஆன்றோர் வாக்கு. ஒரு கோவில் என இருந்தால் அதனை சுற்றி நிறைய  வளங்கள் இருக்கும். மரங்கள், ஆறுகள், வயல்கள், பறவைகள் இருக்கும். கோவிலுக்கு நிறைய பக்தர்கள் வருவார்கள்.  அவர்கள் மூலம், கோவிலை சுற்றி உள்ள கடைகளுக்கு நல்ல வியாபாரம் ஆகும். இதனால் உந்தப் பட்டு, இன்னும் நிறைய வியாபாரிகள், அங்கு வியாபாரம் செய்ய வருவார்கள்.

கோவில் கோபுரங்களில் இடி தாங்கி இருக்கும். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றம் காலத்தில், ஊர் மக்கள் கோவிலில் தங்குவார்கள்.‌ அதன் மூலம் அவர்களின் உயிரும், உடைமையும் பாதுகாக்க படும்.

“மதுரை” என நினைத்து பார்த்தாலே, நமக்கு மீனாட்சி அம்மனும், அங்குள்ள கடைகளும் தான்  நினைவுக்கு வரும். பண்டைய கோவில்கள் அனைத்தும், சுற்றி உள்ள ஊர் மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வந்தது.

பிரமாண்டமான கோவில் கட்டிய மன்னர்கள், தாங்கள் இவ்வுலகை விட்டு சென்ற பிறகும், அந்த கோவில்கள் அதனைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதற்காக, வருமானம் தரக் கூடிய நிறைய விளை நிலங்கள் மற்றும் சொத்துக்களை உயில் எழுதி வைத்து விட்டு இறைவனடி சேர்ந்தனர்.

ஆனால்… தற்போது கோவில்கள் நிலையோ…‌ அந்தோ பரிதாபம்..!!

இந்து மதத்தினர் மட்டுமே, இந்து மதம் சார்ந்த கோவில்களில் பணி புரிய வேண்டும் என்பது விதி. ஆனால், ஒருவர் மாற்று மதத்திற்கு மாறினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், இந்து சமய அறநிலையத் துறையில் பணி புரிந்து வருவது நாம் பார்த்து அறிந்த‌ நிகழ்வு.

கோவில் சொத்துக்களை மற்ற மதத்தினர் ஆக்கிரமிப்பு…

மிகவும் குறைந்த வாடகை என்றாலும் அதனை தராமல் இழுத்தடிப்பு…

கோவில் தூண்கள் சுகாதாரமற்ற இடங்களில் கண்டெடுப்பு…

உச்சானிக் கொம்பாக…

அரசியல் கட்சிகள் கோவில் இடங்களை பட்டா போட்டு தர முயல்வது… போன்றவைகள் பக்தர்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருகின்றது…

இந்து சமய அறநிலையத் துறை:

இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1925 – ஆம் ஆண்டிற்கு முன்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வந்தன. 1925-ஆம் ஆண்டில் “இந்து சமய அறநிலைய வாரியம்” ஏற்படுத்தப் பட்டது. இந்து திருக் கோயில்கள், அற நிறுவனங்கள் மற்றும் திரு மடங்கள் வாரியத்தால், கண்காணிக்கப் பட்டு வந்தது. 1951 ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலைய வாரியம் கலைக்கப் பட்டு, அரசுத் துறையாக செயல் பட வழி வகை செய்யப் பட்டது. 1959 – ஆம் ஆண்டில் இருந்து அமலில் இருந்த, “இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம்” நடைமுறை படுத்துவதில் சில இன்னல்கள் ஏற்பட்டது. இவற்றினை சரி செய்யவும், பல்வேறு திருத்தங்களை ஒருங்கிணைக்கவும், 1959-ஆம் ஆண்டில் “இந்து சமயம் மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம்” இயற்றப் பட்டது.

ஜனவரி 1, 1960 முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1959 -ஆம் ஆண்டு “இந்து சமயம் மற்றும் அறநிலைக் கொடைகள்” சட்டத்தில் காலத்திற்கேற்ப சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. இந்த சட்டத்தின் மூலம் நிர்வாகத்தினை விரிவுபடுத்தி, ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலர்களின் அதிகார வரம்புகளை வரையறுத்து, திருக்கோயில்கள் மற்றும் அறநிறுவனங்களை கண்காணிக்க வழி வகை செய்யப் பட்டது.

நிர்வாக அமைப்பு:

இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1959 – ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் (திருத்தப் பட்ட சட்டம்) கீழ் இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இந்திய ஆட்சி பணி (I.A.S.) அலுவலர் ஒருவரை ஆணையராக நியமிக்கப் பட்டு, பணியாற்றி வருகிறார். துறையின் பொது நிர்வாகம் மற்றும் அனைத்து செயல்பாடுகளுக்கு தலைமைப் பொறுப்பில் ஆணையர் உள்ளார். ஆணையர், அலுவலர்கள், சார் நிலை அலுவலர்கள், செயல் அலுவலர்கள், அயல் பணி அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளடங்கிய 2409 அங்கீகரிக்கப் பட்ட பணியிடங்கள் உள்ளன. தற்போது 1336 பணியாளர்கள் இந்த துறையில் பணியாற்றி வருகின்றனர். ஆணையருக்கு உதவியாக தலைமையிடத்தில் பல்வேறு அலுவலர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:

  • கூடுதல் ஆணையர் (பொது)
  • கூடுதல் ஆணையர் (விசாரணை)
  • கூடுதல் ஆணையர் (திருப்பணி)
  • இணை ஆணையர் (தலைமையிடம்)
  • இணை ஆணையர் (சட்டச் சேர்மம்)
  • இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்)
  • இணை ஆணையர் (சரி பார்ப்பு – தலைமை இடம்)
  • உதவி ஆணையர் (சட்டச் சேர்மம்)
  • உதவி ஆணையர் (கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம்)
  • ஆசிரியர், திருக் கோயில் திங்கள் இதழ்

பத்திரிகை செய்தி 1:

தமிழகம் முழுவதும் நிறைய கோவில்களையும், கோவில் இடங்களையும் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்து வருவதை நாம் பத்திரிகை செய்திகளில் படித்து இருப்போம்.

ஆயிரத்து நூறு கோடி மதிப்பு உள்ள 1564.75 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு மீட்டெடுத்து இருப்பதாக, 2014 ஆம் ஆண்டு அன்றைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு P செந்தூர் பாண்டியன் அவர்கள் சட்ட பேரவையில் அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள 25,868 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக பத்திரிகை செய்தி வெளி வந்து உள்ளது.

“பார்த்தசாரதி” என பெயர் வைத்து உள்ள ஒரு நபர் “பார்த்தசாரதி கோவில்” நிலங்களை ஆக்கிரமித்து உள்ளதாகவும், “கபாலி” என்று பெயர் வைத்து உள்ள ஒரு நபர் “மயிலை கபாலீஸ்வரர் கோவில்” நிலங்களை ஆக்கிரமித்து உள்ளதாகவும், “மாரியம்மாள்” என பெயர் வைத்து உள்ள ஒரு நபர் “மாரியம்மன் கோவில் நிலங்களை” ஆக்கிரமித்து உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளி வந்து உள்ளது.

இதனைப் போலவே, பலர் இறைவன் பெயர் கொண்டு, அந்த கோவில்கள் நிலங்களை கையகப் படுத்தியது, அரசு விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

1466 கோவில்களுக்கு சொந்தமான, 6,847.26 ஏக்கர் கோவில் நிலப் பரப்புகள், மீட்கப் பட்டு உள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.

இவற்றைப் போலவே, இன்னும் மீட்கப் பட வேண்டிய கோவில் நிலங்கள் நிறைய உள்ளன என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

பத்திரிகை செய்தி 2:

சேலம் சின்னக் கடை வீதியில் உள்ளது வேணுகோபால சுவாமி திருக் கோவில். இந்த திருக் கோவிலுக்கு சொந்தமாக 1899 இல் கிருஷ்ணன் செட்டியார் என்பவர், சேலம் –  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திருவகவுண்டனூர் பகுதியில் உள்ள 3.60 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.  இந்த நிலையில், அந்த நிலத்தை தனியார் நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து 80 க்கும் மேற்பட்ட வீடுகள், மற்றும் 10 க்கும் மேற்பட்ட கடைகளை, கடந்த 80 வருடங்களாக நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வேணு கோபால ஸ்வாமி கோயில் நிர்வாகம் சார்பில், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கு விசாரணை முடிந்து, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை கையகப்படுத்த, உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள், நீதி மன்றம் மூலம் மீட்கக் கூடும், இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப் கூடும். தற்போது மீட்கப் பட்டு உள்ள நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய், மேலும் அருகில் உள்ள நிலம் ஆய்வு செய்யப்பட்டு, மீட்கக் கூடும்.

பத்திரிகை செய்தி 3:

 நவம்பர் 2020 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “கோவில் நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப் பட வேண்டும் என்றும், இந்து சமய அறநிலையத் துறை, இதற்காக கூடுதல் கவனம் தர வேண்டும்”, எனவும் கூறி இருந்தது.

பத்திரிகை செய்தி 4:

 திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில், 750  கோடி மதிப்பு உள்ள, 76 ஏக்கர் நிலத்தில் அடுக்கு மாடி வளாகம் கட்டப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்து உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருக்குறுங்குடியில் உள்ள ஜீயர் மடத்தின் சொத்துக்களை பெரும் பாலும் மாற்று மதத்தினரே, வாடகைக்கு எடுத்து உள்ளனர். அதற்கு, அவர்கள் வாடகைக் கூட தராமல், இழுத்தடிப்பு செய்தும் வருகின்றனர்.

ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாழ்ந்து, வளர்ந்து, தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தார்கள். அவர்கள் நமது கலாச்சாரத்தையும், பெருமையும், உலகறியச் செய்தார்கள். தஞ்சாவூர் பெரிய கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் நமது பாரம்பரிய சிறப்புகளை உலகளாவிய அளவிற்கு கொண்டு போய் சேர்த்தது.

இஸ்லாமிய படை எடுப்பின் போது பல கோவில்கள் இடித்து தரை மட்டமாக்கப் பட்டன. அதற்கு ஒரு சான்று, மதுரை. மாலிக்காபூர் படை, சிவலிங்கத்தை சேதப் படுத்தி சூறையாடியது.

கிறிஸ்தவர்கள் நமது நாட்டை ஆக்கிரமித்து, பல்வேறு வகைகளில் இன ரீதியாக, மொழி ரீதியாக நம்மை பிளவு படுத்தினர்.

நம்மை சுற்றியுள்ள, நமக்கு தெரிந்த கோவில் நிலப் பரப்புகளை அகற்ற நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் கடந்து, இன்னும் இந்த மண்ணில் நீடித்து, நிலைத்து நிற்கும் நமது கோவில்களை காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

இந்து இன்றே ஒன்று படு…

 – அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

 

 

 


Share it if you like it

3 thoughts on “பறிபோகும் கோவில் சொத்து…!!! கோவில் நில ஆக்கிரமிப்பு…!!!

  1. கோவில் சொத்துக்களை கயவர்கள் கைகளிலிருந்து கடவுள்தான் காப்பாற்றவேண்டும்..

  2. If Tamil Nadu depend on drevdian political parties, there’s no future for Hindu temples and it’s properties. Thease guys are expert’s to loot in the name of Hindu temples, which we noticing since more than seven decades.
    The up CM aditynath is bringing a new law to safeguard all the religious temples in up.
    But the drevdian parties will not bring such laws.
    Anyway election is coming choose other than the present parties if you have interest to save Hindu temples.
    Put the nation first.

Comments are closed.