பள்ளி குழந்தைகள் மீது அந்நிய மொழி  திணிக்கும் கேரள அரசிற்கு வலுக்கும் எதிர்ப்பு..!

பள்ளி குழந்தைகள் மீது அந்நிய மொழி திணிக்கும் கேரள அரசிற்கு வலுக்கும் எதிர்ப்பு..!

Share it if you like it

கோவில்களின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் தற்பொழுது கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களில் திருவிதாங்கூர் தேவஸம் வாரியத்தின் கீழ் பல பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அண்மையில் தேவஸம் போர்ட்டு தனது  பள்ளிகளில் அரபு மொழி பயிற்றுவிக்கும் நான்கு ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது. ஷமீரா, புஷாரா பீகம், முபாஷ் மற்றும் சுமையா முஹம்மது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கணிதம், இசை, சமூக அறிவியல், இந்தி போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்களையும் இந்த வாரியம் நிரப்பியுள்ளது.

ஆனால் இந்திய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருத ஆசிரியர்களை நியமிக்காமல் புறக்கணித்து இருப்பது கேரள மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it