கொரோனா தொற்றினால் ரத்த கண்ணீர் வடித்து வரும் உலக மக்களுக்கு சீனா நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அண்மையில் ஜம்மூ- காஷ்மீரில் இருந்து 370 பிரிவை இந்தியா நீக்கியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் வீரவசனம் பேசி வர்த்தக உறவை இந்தியாவிடம் முறித்து கொண்டது. கொரோனா தொற்று தற்பொழுது அந்நாட்டில் பேயாட்டம் ஆடிவருகிறது. தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என்று சில மருந்து பொருட்களின் பட்டியலை இந்தியாவிடம் நீட்டியது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறியதற்கும் மிகக் குறைவாகவே மக்களிடம் சோதனை நடத்தியதற்காகவும். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க தவறியதற்காக பாகிஸ்தான் அரசை உலக சுகாதார அமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியாவை விட பாகிஸ்தான் தொற்று ஒழிப்பில் சிறப்பாக செயல்படுகிறது என்று கூறிய சி.ஏ.ஏ எதிர்ப்பு போராளிகள் இதற்கு என்ன பதில் கூறுவார்கள் என்று நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/FrontalAssault1/status/1284709667021758467