பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்களுக்கும் உதவுங்கள் – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கனேரியா  !

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்களுக்கும் உதவுங்கள் – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கனேரியா !

Share it if you like it

  • பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் நிதி சேகரித்து உதவி செய்யும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் இதற்கு ஆதரவு தெரிவித்து இருவரும் ட்விட்டரில் அந்த அமைப்பிற்கு நிதி அளித்து உதவி செய்யுங்கள் என்று இரண்டு நாள் முன்பு ட்வீட் செய்தனர்.
  • இந்நிலையில் பாகிஸ்தானை சேந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஹிந்து மதத்தை சார்ந்தவருமான தினேஷ் கனேரியா ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களான ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு தற்போது உங்களுடைய உதவி தேவைப்படுகிறது ஹர்பஜன் சிங். அவர்களுக்கு உதவும் வகையிலும் ஏதாவது ட்வீட் போடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அந்த டுவீட்டை தற்போது பலரும் ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.

https://twitter.com/DanishKaneria61/status/1245946849355132928?s=20


Share it if you like it