சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பாகிஸ்தானில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு என்பதே பெரும் கேள்விகுறியாகியுள்ளது. சிறுபான்மை பெண்களை கற்பழிப்பது, சீன நாட்டிற்கு கடத்துவது, ஏழைகளின் உறுப்புகளை திருடுவது, என்று சீனர்களின் அட்டூழியம் எல்லை மீறி வருகிறது.
பாகிஸ்தான் இஸ்லாமிய மதகுரு முப்தி தாரிக் மசூத் என்பவர் சீனாவிற்கு எதிராக அண்மையில் காணொலி ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கூறியிருந்தார்.
”இது ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு இடம் இல்லை. சிபிஇசி தொழிற்சாலைகளில் பணிபுரியும் பாகிஸ்தானியர்களை சீனா, நமாஸ் செய்வதற்கு தடை செய்கிறது. பாகிஸ்தான் சீனாவின் காலனியாக மாறியுள்ளதா? சீனாவின் அரசிற்கு கீழ் உள்ளாதா? என்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றினை வெளியிட்டு பாகிஸ்தானை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
What cost sir… we are already a colony. Look how Pakistan's police is treated by common Chinese in Pakistan.
Look at the helplessness, visible on Pakistani's face.
This is total imperialist behaviour. Pakistan is China now. Skardu airport & Gwader port are in total control of🇨🇳 pic.twitter.com/PutN1ikkdz— Arif Aajakia (@arifaajakia) June 24, 2020