ஜ.நா மனித உரிமை ஆனணயத்தின் 43 அமர்வு ஜெனிவா நகரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தானின் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கு ஆணித்தரமான ஆதாரங்கள் மூலம் இந்தியாவின் முதன்மைச் செயலர் விமர்ஷ் ஆர்யான் எடுத்துரைத்தார். காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் இதில் பாகிஸ்தான் மற்றும் ஓ.ஜ.சி இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு இதில் தலையீடுவதை எங்கள் நாடு விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடமாக உள்ள நாடு, அந்நாட்டில் நடக்கும் தீவிரவாத தாக்குதல் பற்றி அதன் தலைவர்களே வெளிப்படையாக கூறிவருகின்றனர். காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் தவறான கருத்தை பரப்பி வருவதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து பாகிஸ்தான் பிடியில் தவிக்கும் எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று, ஜ.நா மனித உரிமை ஆனணயத்தின் முன்பு பலூசிஸ்தான் ஆதரவாளர்கள், பெண்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.