பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
உலகையே ரத்த கண்ணீர் வடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளிய சீனாவின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்டை நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ததுள்ளது.
அண்மையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமியப் போபியா’ பிரச்சாரத்தை பாகிஸ்தான் அக்கூட்டத்தில் திணிக்க முயன்றது. இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் மீது அச்சுறுத்தல் என்கின்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் உண்மையில் தவறானவை என்று மாலத்தீவு அதிபர் அந்நாட்டை கண்டித்திருந்தார்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ் தான் மற்றும் பாலஸ்தீனம் போன்ற இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா வலுவான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது. இந்த நாடுகளில் பிரதமர் மோடிக்கு உயர் சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளுக்கு மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் தமது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.