பாகிஸ்தான் நாட்டிற்கு தொடர்ந்து செல்லும் காங்கிரஸ் தலைவர்கள்!

பாகிஸ்தான் நாட்டிற்கு தொடர்ந்து செல்லும் காங்கிரஸ் தலைவர்கள்!

Share it if you like it

அசிய கண்டத்தின் அமைதியை கெடுக்கும் பயங்கரவாத குழுக்கள் அதிகம் உள்ள நாடு என்றால் அது பாகிஸ்தான் என்பதனை  அனைவரும் அறிவர். இந்நாடு நேரடியாக இந்தியாவிடம்  மோதாமல் மறைமுகமாக தீவிரவாதிகள் மூலம் பல்வேறு தொல்லைகளை  கொடுத்து வரும் நிலையில்.

இது போதாது என்று காங்கிரஸ் தலைவர்கள் செய்யும் கூத்து நம் நாட்டின் இறையாண்மைக்கே அபாயம் விளைவிக்க கூடிய நிலையில் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். அண்மையில் ராகுல் காந்தி டுவிட்டரில் 370 பிரிவு தொடர்பாக  பதிவு செய்த  கருத்துக்களை பாகிஸ்தான் ஜ.நா சபை வரை கொண்டு சென்று இந்தியாவிற்கு எதிராக  இதுவும் ஒரு ஆதாரம் என்று காட்டுவதும்.

மணிசங்கர் அய்யர் அந்நாட்டிற்கு சென்று தனது கருத்தினை கூறியதை  அடுத்து இந்தியா முழுவதும் கடும்  கண்டனத்திற்கு  உள்ளாகிய நிலையில், காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த  மூத்த  தலைவர்கள் பலர் அந்நாட்டிற்கு சென்று வந்துள்ள நிலையில்

மீண்டும் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. சத்ருகன் சின்ஹா பாகிஸ்தான்  ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வியை லாகூரில் சந்தித்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் பற்றியும், காஷ்மீர் பற்றியும் விவாதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்நாட்டிற்கு காங்கிரஸ் தலைவர்கள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதன்  நோக்கம் தான் என்ன? என்று பலரின் கருத்தாக உள்ளது.

 


Share it if you like it