பாக்.., ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல! பாக்.., மததலைவர் முப்தி தாரிக் மசூத்- சீனாவிற்கு எச்சரிக்கை!

பாக்.., ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல! பாக்.., மததலைவர் முப்தி தாரிக் மசூத்- சீனாவிற்கு எச்சரிக்கை!

Share it if you like it

உலகம் முழுவதும் சீனா மீது தற்பொழுது பல்வேறு நாடுகள் கடும் கோபத்தில் உள்ளது மட்டுமில்லாமல் உள்நாட்டிலேயே சீன அதிபர் ஜின் பிங் மீது கடும் கோபத்தில் மக்கள் உள்ளனர்.  தன் மீது சீன மக்கள் கொண்ட கோபத்தை திசை திருப்ப அந்நாட்டின் அதிபர் கையில் எடுத்த ஆயுதமே இந்தியா மீது போர் என்கின்ற பூச்சாண்டி என்பது நிதர்சனமான உண்மை.

சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பாகிஸ்தான் நாட்டில் அதிகரித்து வருவதால். அங்கு வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு என்பது தற்சமயம் பெரும் கேள்வி குறியாகியுள்ளது. சீனர்கள் பாகிஸ்தான் சிறுபான்மை பெண்களை கற்பழிப்பது, தங்கள் நாட்டிற்கு கடத்துவது, ஏழைகளின் உறுப்புகளை திருடுவது, என்று சீனர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனர்கள் ஏதேனும் புகாரில் மாட்டிகொண்டால் லஞ்சம் கொடுப்பது அல்லது மேலிடத்து உத்தரவு மூலம் தப்பித்து கொள்வது என்று வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமிய மததலைவர்களில் ஒருவரான முப்தி தாரிக் மசூத் என்பவர் அண்மையில் காணொலி ஒன்றை வெளியிட்டு அதில் இவ்வாறு கூறியுள்ளார்.

இது ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு இடம் இல்லை. சிபிஇசி தொழிற்சாலைகளில் பணிபுரியும் பாகிஸ்தானியர்களை சீனா அரசு தற்பொழுது நமாஸ் செய்வதற்கு தடை செய்கிறது. பாகிஸ்தான் சீனாவின் காலனியாக மாறியுள்ளதா? சீனாவின் அரசிற்கு கீழ் உள்ளாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it