பாரதப் பிரதமர் மோடி வழங்கிய நன்கொடை பிரபல இணையதளம் வெளியிட்ட பட்டியல்..!

பாரதப் பிரதமர் மோடி வழங்கிய நன்கொடை பிரபல இணையதளம் வெளியிட்ட பட்டியல்..!

Share it if you like it

  • 2019-ஆம் ஆண்டு கும்பமேளா திருவிழால். பணியாற்றிய தூய்மை பணியாளர்களின் நலனுக்காக தனது சேமிப்பிலிருந்து 21 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
  • கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து 2.25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
  • கடந்த ஆண்டு தென் கொரியாவில் சியோல் அமைதி பரிசைப் பெற்றார். அதில் கிடைத்த 11.3 கோடி ரூபாய் பரிசுத் தொகையை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்குவேன் என்று அதிரடியாக அறிவித்தார்.
  • சிறிது காலத்திற்கு முன்பு அவர் பெற்ற பரிசு பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைத்த 8.35 கோடி ரூபாயை கங்கை நதி தூய்மை பணி திட்டத்திற்கு வழங்கினார்..
  • மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடியால் பெறப்பட்ட பரிசு பொருட்களை ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த ரூ 3.40 கோடி ரூபாயை கங்கை நதியை தூய்மை திட்டத்திற்கே வழங்கினார்.
  • குஜராத் முதல்வராக மோடி இருந்த பொழுது தனது சேமிப்பிலிருந்த ரூ .21 லட்ச ரூபாயை மாநில அரசு அதிகாரிகளின் மகள்களுக்கு கல்வி கற்பதற்காக நன்கொடையாக வழங்கினார்.
  • குஜராத் முதல்வராக இருந்த பொழுது தனக்கு கிடைத்த அனைத்து பரிசுகளையும் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைத்த ரூ 89.96 கோடி ரூபாய் தொகையை கன்யா கேளவானி என்ற பெண்‌ குழந்தைகளின் கல்விக்காக ஏற்படுத்தப்பட்ட நிதி அமைப்புக்கு அப்படியே அளித்து விட்டார்..
  • 2015-ஆம் ஆண்டு தனக்கு பரிசாக கொடுக்கப்பட்ட நரேந்திர மோடி என்று தனது பெயரை தங்க இழைகளால் நெய்யப்பட்ட கோட்டை(coat) ஏலத்தில்‌ விடப்பட்டு அதிலிருந்து கிடைத்த ₹4.31 கோடி ரூபாயையும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கே வழங்கினார்.
  • தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள், தன் உழைப்பில் கிடைத்த ஊதியம் என்று அனைத்தையும் பெண் கல்வி, கங்கை நதி திட்டம், ஏழைகளுக்கு என்று பிரதமர் மோடி உடனே வழங்கி விடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ரூ.103 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி இருப்பதாக தற்பொழுது செய்திகள் வெளி வர துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • In Unexpected Move, PM Narendra Modi Washes Feet of 'Safai Karamcharis' at Kumbh, Twitter Erupts in Praise | Watch Video | India.com
    கும்பமேளா தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த பொழுது

Share it if you like it