அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் பகுதியில் முத்து குமார் என்னும் கூலி தொழிலாளி தனது சொந்த நிலத்தில் கோவில் ஒன்றை உருவாக்கி அக்கோவிலில் பாரத மாதா சிலை ஒன்றையும் நிறுவியுள்ளார்.
இதனை பொறுக்க முடியாத கிறிஸ்துவ மிஷநரி மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் தூண்டுதலின் பெயரில் அச்சிலையை அகற்றுமாறு காவல்துறை முத்து குமாருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தது மட்டுமில்லாமல் அச்சிலையை காவல்துறை அவமதிக்கும் வகையில் வெள்ளை துணியை கொண்டு போர்த்தியது.
இதற்கு நாடு முழுவதும் மட்டுமில்லாமல் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் ஒருவரும் ஹிந்துக்கள் என்ன? இரண்டாம் தர குடிமக்களாக என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். பாஜக மூத்த தலைவர்கள் அல்போன்ஸ்(எம்.பி), தருண் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தீவிர முயற்சியின் விளைவாக இன்று பாரத மாதா சிலை அதே கம்பீரத்துடன் மக்கள் முன்னிலையில் மீண்டும் மரியாதை செய்யப்பட்டுள்ளதை தருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A movement to salute #soldiers & #BharatMata in Kanyakumari where police retreated under patriotic villagers solidarity.#BharatMata honour restored with common villagers help.Will we hv Bharat Mata statues in every city?Why did we hv to battle it out? Why was #BharatMata Opposed? pic.twitter.com/rpiLKyNNjb
— Tarun Vijay தருண் விஜய் भारत के वीर सैनिकों की जय (@Tarunvijay) May 25, 2020