நமது அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை இறக்குமதி செய்வது மட்டுமில்லாமல், சீனாவின் தூண்டுதலின் பெயரில் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
பாகிஸ்தானில் வசிக்கும் ஏழை சிறுபான்மை மக்களின் உறுப்புகளை அந்நாட்டின் ராணுவமே திருடி காசு பார்க்கும் அவலம் சற்று தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை 40,000 மேற்பட்ட மக்களின் நிலை என்ன? என்பது பெரும் கேள்விகுறியாகியுள்ளது. அதுமட்டுமில்லாது தினம் தினம் 10 முதல் 15 வரைக்கும் மேற்பட்ட அப்பாவி சிறுபான்மை மக்கள் காணாமல் போவதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது.
மீண்டும் ஒரு சம்பவமாக பாகிஸ்தானில் வசிக்கும் ஏழை சிறுபான்மை பெண்களை நாடு கடத்தி சீனாவில் விற்கும் அவலம் தற்பொழுது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தானில் இதற்கென்றே தரகர்கள் மிக தீவிரமாக ஏழை பெண்களை கடத்துவது, அல்லது அக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏழை பெண் குழந்தைகளை சீனர்களிடம் விற்று தாராளாமாக பணம் பார்க்கும் அவலம் இன்று வரை அந்நாட்டில் தொடர்கிறது.
பாக்கிஸ்தானிய தரகர்கள் சீன மணமகனிடமிருந்து 4 மில்லியன் முதல் 10 மில்லியன் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். குழந்தைகளை விற்கும் ஏழை குடும்பத்தாரிடம் வெறும் சொற்ப தொகையை. 50,000 முதல் 1,00,000 வரை வழங்கி விடுகின்றனர். சீனர்கள் யாரேனும் பாகிஸ்தான் காவல்துறையில் சிக்கினால் லஞ்சம் வழங்கி வெளியே வந்து விடுகின்றனர் அல்லது பெரிய இடத்து உத்தரவு மூலம் அவர்கள் ஜாமீன் பெற்று விடுகின்றனர்.
பெண்கள் கட்டாய கருவுற்றல், பாலியல் துஷ்பிரயோகம், கட்டாய விபச்சாரம், உடல் உறுப்புகள் திருடுவது, பிச்சைக்காரர்களாக அப்பெண்களை பயன்படுத்துவது, இளம் வயதில் விதவை என்று தினம் தினம் சிறுபான்மை மக்கள் கொடுமைகளை அந்நாட்டில் அனுபவிக்கின்றனர்.
சீனாவுடனான நெருக்கமான உறவு பாதிக்காத வகையில் மணமகள் கடத்தலை அமைதியாக கண்டும் காணாமல் பாகிஸ்தான் அரசு செயல்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.ஏ.ஏ கொண்டு வந்த மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்கும் சில்லறை போராளிகள் இதற்கு என்ன? பதில் கூறுவர் என்பது மில்லியன் டாலர் கேள்வி!