பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால்  கிடைக்கும் நன்மைகள்!

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Share it if you like it

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை ஆங்கிலத்தில் அழகாக ’கோல்டன் மில்க்’ என்பார்கள். பெயரில் மட்டுமல்ல உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு கோல்டன் பால் தான். நச்சு நீக்கியாக இருக்கும் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பல வகையான நன்மைகள் உள்ளன. அதனால்தான் ஜப்பானில் இன்று வரையிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.:

நோய்களைத் தவிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இருமல், சளி போன்ற நேரத்தில் மஞ்சள் கலந்த பால் குடிப்பது மிகவும் நல்லது. உடல் ஏதேனும் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் மஞ்சள் பால் குடிக்கும்போது அதை எதிர்த்துப் போராடும்.

நீரிழிவு நோயை தடுக்கும் :

மஞ்சளில் நீரிழுவு நோயை எதிர்த்துப் போராடக் கூடிய குர்கியூமின் என்ற ஆற்றல் பொருள் உள்ளது என ஆய்வில் கண்டரியப்பட்டுள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து சீராக வைக்கும். எனவே உங்கள் மருத்துவரின் ஆலோசனை படி மஞ்சள் அளவு, எத்தனை வேளை பருகலாம் என்பனவற்றை கேட்டு தெரிந்துகொண்ட பின் குடியுங்கள்.

இதயத்திற்கு நல்லது :

இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மஞ்சள் மிக முக்கியமான பொருள். கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும். இதயம் சீராக இயங்கி ஆரோக்கியமாக இருந்தாலே ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.பயன் படுத்துங்கள் நண்பர்களே


Share it if you like it