பாவத்தை போக்கி கொள்ள திமுகவின் 5 MLA-க்கள்..! பதவியை ராஜினாமா செய்யுங்கள் பாஜக பொதுச்செயலாளர் காட்டம்…!

பாவத்தை போக்கி கொள்ள திமுகவின் 5 MLA-க்கள்..! பதவியை ராஜினாமா செய்யுங்கள் பாஜக பொதுச்செயலாளர் காட்டம்…!

Share it if you like it

பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. சீனிவாசன் அவர்கள் திமுகவிற்கும் அதன் ஆதரவு பெற்ற கறுப்பர் கூட்டத்திற்கும் தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தோடு மட்டுமில்லாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

”முருகனின் அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், பழமுதிர்சோலை, சுவாமிமலை ஆகிய ஐந்து படை வீடுகளில் திமுகவினரே MLAகளாக உள்ளனர். கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய போது, சிறிய கண்டனம் கூட இவர்கள் தெரிவிக்கவில்லை.

இது, அவர்கள் வெற்றி பெற்ற தொகுதியில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமானையும், வாக்களித்த மக்களையும் அவமரியாதை செய்வதே. இதற்கு பாவ பிராயச்சித்தமாக, தங்களது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கடவுள் முருகனிடம் மன்னிப்பு கேட்டு தங்கள் பாவத்தை போக்க வேண்டும். என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it