பாஸ்டேக், காலஅவகாசம் நீட்டிப்பு

பாஸ்டேக், காலஅவகாசம் நீட்டிப்பு

Share it if you like it

சுங்கச்சாவடிகளில் ஏற்படும் காலவிரயத்தையும், எரிபொருள் விரயத்தையும் தடுப்பதற்காகவும் மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பாஸ்டேக். இந்த திட்டத்தின்படி அனைத்து சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்களின் கண்ணாடி முகப்பில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்படும் அதில் கியூஆர் கோடுடன் எண்கள் இருக்கும்.

அந்த எண்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும். அதன் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியை அடையும்போது அங்கிருக்கும் கேமராமூலம் அந்த கியூஆர் கோடானது ஸ்கேன் செய்யப்பட்டு பணம் பெறப்படும், அதற்கான ரசீது குறுஞ்செய்தியாக நமது மொபைல் போனுக்கு அனுப்பப்படும்.

இதன்மூலம் வாகனங்கள் விரைவாக சுங்கச்சாவடியை கடக்க இயலும். இனி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் நேரவிரயமும், எரிபொருள் விரயமும் தடுக்கப்படுகின்றது. அனைத்து வாகனங்களும் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் பாஸ்டேக்கை பொருத்தவேண்டும் என மத்திய அரசானது அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் இன்னும் 25 விழுக்காடு வாகனங்கள் பாஸ்டேக்கை பொறுத்தாத காரணத்தினால் ஜனவரி 15 வரை பாஸ்டேக்கை பொருத்திக்கொள்ள காலஅவகாசத்தை நீடித்து சாலைப்போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Share it if you like it