பா.ஜ., தேசிய தலைவராக இன்று தேர்வாகிறார் நட்டா

பா.ஜ., தேசிய தலைவராக இன்று தேர்வாகிறார் நட்டா

Share it if you like it

நாடு முழுதும், பா.ஜ.,வின், உட்கட்சித் தேர்தல்கள், பல மாதங்களாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கும், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான தலைவர், பொதுச் செயலர் உட்பட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகளை, மூத்த தலைவர் ராதா மோகன்சிங் தலைமையிலான குழு, மேற்பார்வையிட்டு வருகிறது. டில்லியில், பா.ஜ., தலைமை அலுவலகத்தில், தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடக்கிறது. தேசிய தலைவராக, தற்போதைய செயல் தலைவரான ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

நட்டாவின் பெயரை, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துனை முதல்வர்கள், மாநில தலைவர்கள் வழிமொழிந்து, மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனர். நட்டாவுக்கு எதிராக, வேறு யாராவது மனு தாக்கல் செய்தால், நாளை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பா.ஜ.,வின் தேசிய தலைவர், எப்போதுமே ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவதே வழக்கம். அதனால், நட்டாவுக்கு எதிராக, வேறு யாரும் மனு தாக்கல் செய்யமாட்டார்கள் என கருதப்படுகிறது. அதனால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும், இப்போதைய தலைவருமான அமித் ஷா ஆகியோர் முன்னிலையில், தேசிய தலைவராக,ஜே.பி.நட்டா ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ., தலைவராக, கடந்த, 2014ல், அமித் ஷா பொறுப்பேற்றார், ஐந்தரை ஆண்டுகளில், பா.ஜ., பல மாநிலங்களில், சட்டசபை தேர்தல்களில் வென்றது; மத்தியில், ஆட்சியை தக்க வைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில், உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றார். இதையடுத்து, புதிய தலைவராக, ஜே.பி.நட்டா தேர்வாக உள்ளார்.


Share it if you like it