Share it if you like it
- பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செவ்வாயன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அந்த உரையில் கொரோனா நோய் தோற்று குறித்தும் பொருளாதாரத்தை குறித்தும் பேசியிருந்தார். மேலும் அதில் நாட்டின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டார். இந்நிலையில் பிபிசி தமிழ் ஊடகமானது மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையில் ஒரு விஷம பதிவை வெளியிட்டது. அதில் “கொரோனா வைரசால் ஊரடங்கு காலத்தில் நாடே பிரதமர் மோடியின் உரைக்காக காத்திருக்கும் சூழலில், அவர் ஹிந்தி மொழியில் மட்டும் உரை நிகழ்த்துவதை எப்படி பார்க்கிறீர்கள்” என மக்களிடையே கேள்வி கேட்கும் வகையில் செய்தி வெளியிட்டிருந்தது.
- பிபிசி தமிழ் ஊடகத்திற்கு தக்க பதிலடி தரும் வகையில் நெட்டிசன் ஒருவர் அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில் எங்களை ஹிந்தி கற்றுக்கொள்ளாமல் தடுக்கும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என தோன்றியது” என்று பதில் அளித்திருந்தார். இந்த பதிவை பலரும் லைக் செய்து மற்றும் ரீட்வீட் செய்து வருகின்றனர். தற்போது இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஊரடங்கு காலத்தில் நாடே பிரதமரின் உரைக்காக காத்திருக்கும் சூழலில், அவர் இந்தி மொழியில் மட்டும் உரை நிகழ்த்துவதை எப்படி பார்க்கிறீர்கள்? pic.twitter.com/ee0oApBhKb
— BBC News Tamil (@bbctamil) May 13, 2020
Share it if you like it