பிரிவினை பேச்சு மற்றும்  விசா விதிமுறைகளை மீறுதல் குற்றத்திற்காக கிறிஸ்தவ மிஷனரி அமைப்பின் மீது வழக்கு பதிவு !

பிரிவினை பேச்சு மற்றும் விசா விதிமுறைகளை மீறுதல் குற்றத்திற்காக கிறிஸ்தவ மிஷனரி அமைப்பின் மீது வழக்கு பதிவு !

Share it if you like it

  • தெலுங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தின் பல பகுதிகளில் அப்பாவி  பழங்குடியினர், உறவுகளால் கைவிடப்பட்ட குழந்தைகள், ஆகியோரை கட்டாயப்படுத்தி தீவிரமாக மத மாற்றங்களில் ஈடுபட்டதற்காகவும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (எஃப்.சி.ஆர்.ஏ) மீறியதற்காகவும், பிஷப் ஜேக்கப் மரினேனி தலைமையிலான கிறிஸ்தவ அமைப்பான ‘பழங்குடியினருக்கான சமூக சேவை சங்கம்’ மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துவ மிஷனரி அமைப்புக்கு எதிராக சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் (எல்.ஆர்.பி.எஃப்) உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • கிறிஸ்தவ தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சு, பொதுமக்களிடையே பிரிவினையை உண்டாக்குதல், இந்திய விசா விதிகளை மீறுதல் மற்றும் ஆகிய இந்திய சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • மேலும் கிறிஸ்துவ மிஷனரிகளின் வணிக இலாபத்தை கல்வி மற்றும் சமூக நோக்கத்திற்கு பயன்படுத்தாமல் சட்ட விரோதமாக சுவிசேஷ மற்றும் மதமாற்றம் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது [FCRA] சட்டம், 2010 இன் பிரிவு 8 (1) (அ) இன் கீழ் கடுமையான மீறலாகும்.


Share it if you like it