பல்வேறு தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்ட பின்பே மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதனை அனைத்து தரப்பு மக்களும், கல்வியாளர்களும், வரவேற்றுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. பள்ளி கூடங்கள் நடத்தும் திமுக உட்பட சில அரசியல் கட்சிகள் வழக்கம் போல தங்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு புதிய கல்வி கொள்கை பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மந்திரி,MLA,மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகள் இவர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு பிறகு எதிர்க்கட்டும் மும்மொழிக் கல்வியை!
சிலரின் அரசியல் லாபத்திற்கு ஏழை மாணவர்களின் எதிர்காலம் காவு வாங்கப்படுகிறது!— PERARASU ARASU (@ARASUPERARASU) August 4, 2020