புர்காவுக்கு தடை – இலங்கை பாதுகாப்பு மேற்பார்வை குழு பரிந்துரை

புர்காவுக்கு தடை – இலங்கை பாதுகாப்பு மேற்பார்வை குழு பரிந்துரை

Share it if you like it

கடந்த ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது இதை தொடர்ந்து இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் பாதுகாப்பு மேற்பார்வை குழுவானது முகங்களை மறைக்கும் விதமான ஆடைகளை உடனடியாக தடை செய்ய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி பொது இடங்களில் முகத்திற்கு திரையிடும் வகையிலான புர்கா உள்ளிட்ட ஆடையை யாரேனும் அணிந்திருந்தால் அதை அகற்ற அறிவுறுத்தும்படியும், அகற்றாதபட்சத்தில் வாரண்ட் இல்லாமல் அந்த நபரை கைது செய்யவும் காவல் துறைக்கு ஆதிகாரம் வழங்கவேண்டும் எனவும் இஸ்லாமிய மதரசா பள்ளிகளை 3 வருடத்திற்குள் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் அந்த பரிந்துரையில் கோரப்பட்டுள்ளது.

புர்காவை ஐ.எஸ்.இ.எஸ் தலைமையிடமான சிரியா உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் தடை செய்துள்ள நிலையில் இலங்கை இஸ்லாமியர்கள் இம்முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது


Share it if you like it