பெண்ணின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்ட பஸ், குவிகிறது பாராட்டு..!

பெண்ணின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்ட பஸ், குவிகிறது பாராட்டு..!

Share it if you like it

கேரளாவில், உள்ள கண்ணூரைச் சேர்ந்த, ஜோசப் – எலியம்மா தம்பதியின் மகள் எல்சீனா. கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில், எம்.பில்., படித்து வருகிறார். தன் படிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக, கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு வந்திருந்தார். பின் கோட்டயம் மாவட்டம், கஞ்சிராப்பள்ளியில் உள்ள குடும்ப நண்பரின் வீட்டில் தங்குவதற்காக, 29ம் தேதி இரவு, எர்ணாகுளத்திலிருந்து கிளம்பினார்.

இந்த பஸ், இரவு, 11:00 மணிக்கு, கஞ்சிராப்பள்ளியை வந்தடைந்தது. அன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால், கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லை. எல்சீனாவை அழைத்துச் செல்ல வருவதாக கூறியிருந்த அவரது குடும்ப நண்பரும் வரவில்லை.

இதையடுத்து, எல்சீனாவின் குடும்ப நண்பர் வரும் வரை காத்திருக்க, பஸ் டிவைரரும், கண்டக்டரும் முடிவு செய்தனர். பஸ்சில் இருந்த மற்ற பயணியரும் இதற்கு சம்மதித்தனர். 15 நிமிடத்துக்குப் பின், எல்சீனாவின் குடும்ப நண்பர், காரில் வந்தார். கண்டக்டர், டிரைவர், மற்றும் பயணியருக்கு நன்றி தெரிவித்து, எல்சீனா நண்பருடன் சென்றார்.

இந்த சம்பவத்தை அறிந்த, கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் தொகுதியின், எம்.எல்.ஏ.,வான பி.சி.ஜார்க், பஸ் டிரைவர் டென்னிஸ் சேவியர், கண்டக்டர் ஜார்ஜ் ஆகியோரின் மனிதாபிமான செயலை பாராட்டி, சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டார். இந்த சம்பவத்தை வரவேற்றும், டிரைவர் மற்றும் கண்டக்டரை பாராட்டியும், பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.


Share it if you like it