Share it if you like it
- காங்கிரசை சேர்ந்த அனைத்து இந்திய மருத்துவ குழுமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ஹர்ஜீத் சிங் பட்டி நேற்று ட்விட்டரில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் பெரும் சர்ச்சையானது. அதில் அசாம் மருத்துவ கல்லுரியில் போதிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும் பணியாளர்களுக்கு தன் உடலை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகளை தருகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
I received calls from Assam Medical College that they have PPEs this was tested as what can be used if shortage occurs in case of huge load of patients. pic.twitter.com/scqEQFgNqm
— Harjit Singh Bhatti (@DrHarjitBhatti) March 23, 2020
- அந்த பதிவை இடதுசாரி கட்சியை சேர்ந்த பலரும் ரீ-ட்வீட் செய்தனர். அதற்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட தயாரிப்பாளரும்,பத்திரிகையாளருமான வினோத் கப்ரியும் ரீ-ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் பாரத ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி ஹிமாந்தா பிஸ்வா சர்மா ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
- அந்த பதிவில் வேண்டுமென்றே சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். கடந்த மூன்று நாட்களாக பி.பி.இ என்று அழைக்கப்படும் தனிமனித பாதுகாப்பு உபகரணங்களை தேவையான அளவில் மருத்துவ கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளோம். மேலும் நான் மருத்துவமனை அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டுள்ளேன் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அந்த பதிவை தற்போது பலரும் ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். மருத்துவ குழுமத்தின் ஒருங்கிணைப்பாராக இருக்கும் ஒரு நபர் இவ்வாறு போலியான செய்தியை பரப்புவது கண்டிக்கத்தக்கது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
This tweet is highly motivated and some one must be doing purposefully. We have supplied good number of PPE kits in last 3 days. Police has been asked to register an FIR and investigate . I have personally in touch with hospital authorities https://t.co/c0xVRN5Y2G
— Himanta Biswa Sarma (@himantabiswa) March 23, 2020
Share it if you like it